சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலையம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் கார் சுத்தம் செய்யும் பம்ப் கருவி இருந்தது. இது வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர்.
அதில் 9 உருண்டை தகடு வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை பிரித்து பார்த்த போது தங்க உருண்டை தகடுகளை மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 420 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:போலி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி கைது