ETV Bharat / state

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - சென்னை விமானநிலையம்

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

chennai
chennai
author img

By

Published : Feb 8, 2020, 11:29 PM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளிடம் சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் சிவகங்கையைச் சேர்ந்த இம்ரான் பாபு (37) என்பவரது உடமைகளில் ஸ்கேட்டிங் போர்டு மற்றும் கதவு தாழ்பாள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 551 கிராம் தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், சென்னையைச் சேர்ந்த ஹைசுல் ஹக் (40), திருச்சியைச் சேர்ந்த சையத் காதர் பாஷா (24) இருவரின் காலணிகளிலிருந்து ரூ.20 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் திருச்சியைச் சேர்ந்த சையத் இர்பான் (23) என்பவரிடமிருந்து ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 199 கிராம் தங்கமும், சென்னையைச் சேர்ந்த முகமது தாரீக் ஷியாத் (23) என்பவரிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 191 கிராம் தங்கத்தையும் அலுவலர்கள் கைப்பற்றினார்கள்.

கடத்தல் தங்கம்

மொத்தம் ஐந்து பேரிடமிருந்து ரூ.60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 435 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி 1 கிலோ தங்கம் கொள்ளை

Intro:மலேசியாவில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் Body:மலேசியாவில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த இம்ரான் பாபு(37) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது சறுக்கும் ஸ்கெட்டிங் போர்டு மற்றும் கதவுகளுக்கு பயன்படுத்தும் தாழ்பாள்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருப்பதை கண்டனர். இவரிடம் இருந்து ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 551 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஹைசுல் ஹக்(40), திருச்சியை சேர்ந்த சையத் காதர் பாஷா(24) ஆகியோர் வந்தனர். 2 பேரையும் நிறுத்தி சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் காலில் அணிந்து இருந்த செருப்புகளை சோதனை செய்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 20 லட்சத்தி 74 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த சையத் இர்பான்(23) என்பவரை சோதனை செய்தபோது ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 8 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள 199 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் மலேசியாவில் இருந்து வந்த வேறு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது தாரீக் ஷியாத்(23) என்பவரின் உள்ளாடைக்குள் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 191 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

5 பேரிடம் இருந்து ரூ. 60 லட்சத்தி 9 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 435 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.