சென்னை: துபாய்,சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.2.53 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக சென்னை, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 7 பயணிகளை கைதுசெய்தனர்.
மேலும் சென்னையிலிருந்து சாா்ஜாவுக்கு கடத்தமுயன்ற வெளிநாட்டு பணம் ரூ.24 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சோ்ந்த 4 பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.
ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 11 பயணிகள் கைது செய்யப்பட்டு , அவா்களிடமிருந்து ரூ.2.77 கோடி மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணிகள் தங்கம் , வெளிநாட்டு பணத்தை கடத்துவதற்காக வித்தியாசமாக தலையில் அணிந்துள்ள விக்குகள், காலுறைகள் (சாக்ஸ்கள்) ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே மனைவியை கொலை செய்த கணவர்