சென்னை பாடியில் பிரபல சரவணா ஸ்டார் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இந்த கடையின் கீழ்தளத்தில் தங்கம், வெள்ளி பொருள்கள் விற்பனை பிரிவு அமைந்துள்ளது.
கடையில் விற்பனை முடிந்து இரவு கணக்கு சரி பார்க்கும் போது 12 சவரன் செயின் களவு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், இரண்டு பெண்கள் நகையை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இது குறித்து அக்கடையின் மேலாளர், கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.
சிறிய நகை வியாபார கடைகளில் நகை வாங்குவது போல் கடைக்காரர்களின் கவனத்தைத் திசை திருப்பி ஒரு சில திருட்டு நடைபெற்று வந்த நிலையில் பிரபல நகைக்கடையிலும் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.2.5 லட்சம் கொள்ளை!