மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது சூட்கேசில் ரூ.2.52 கோடி மதிப்புடைய 6.5 கிலோகிராம் தங்கம் பதுக்கி வைத்திருந்தார்.

இதனைக் கண்ட அலுவலர்கள் பயணியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவா் என்று கூறப்படுகிறது.

இதேபோல் சென்னை சா்வதேச விமானநிலையம் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறையை, விமானநிலைய துப்புரவு பணியாளா் ஒருவா் நேற்று இரவு சுத்தம் செய்துள்ளார். அப்பொழுது, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கறுப்பு நிற சிறிய பாா்சல் ஒன்று கிடந்ததைக் கண்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு, பாா்சலை எடுத்து பிரித்து பாா்த்தபோது 200 கிராம் மதிப்புள்ள 2 தங்கக் கட்டிகள் இருந்தன.
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் 3.7 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.