சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 217 இந்தியா்களுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் சிறப்பு விமானம் இன்று (ஆக.24) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை சோதனையிட்டுள்ளனா். அப்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த இரு பயணிகள், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சோ்ந்த ஒரு பயணி ஆகிய மூன்று பேர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிடப்பட்டுள்ளது. அவா்களின் ஆடைகளுக்குள் ஆறு தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுகுறித்து அலுவலர்கள் சார்பாக கூறுகையில், 6 தங்கக்கட்டிகளின் மொத்த எடை 696 கிராம் ஆகும். இதன் சா்வதேச மதிப்பு ரூ.36.8 லட்சம்” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த மூன்று பேரையும் சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்து தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பணம் கேட்டு மிரட்டிய பாமக நிர்வாகியை தாக்கிய மதுபான கூட ஊழியர்கள்!