சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்தடைந்த விமானத்தில் தங்கம் கடத்திவருவதாக கிடைத்த தகவலின்படி, சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இருவரின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர், அவர்களை சோதனை செய்ததில் மொத்தம் 20 மடிக்கணினியும், அதனுள் மறைத்து வைத்திருந்த ரூ 33 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், தங்கம் கடத்திவந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நூர்முகமது(59), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராவுத்தா் நைனாா் முகமது(37)ஆகியோரை கைது செய்தர்.