துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு துபாய் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் இன்று (மே05) வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன் பஞ்சநாதன்(46) என்ற பயணி மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், அவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்ததில், அவரது உள்ளாடைகளுக்குள் 3 தங்க பசை உருளைகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. பின் அதனை பிரித்து பார்த்தபோது அதனுள் 578 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 28 லட்சம் ஆகும்.
இதையடுத்து சுங்கத் துறையினா் அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவர் உடைய உடல் மற்றும் உள்ளாடைகளுக்குள் மறைத்து 3 தங்க பசை உருளைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதனுள் 578 கிராம் தங்கம் இருந்தது அதன் சர்வதேச மதிப்பு 28 லட்சம் ஆகும். இதையடுத்து அப்பயணியை கைது செய்து, அவரிடம் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: பெற்ற தாயை அறையில் அடைத்த மகன்!