துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த முகமது இத்ரீஸ்(25), ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது இர்பான்(36), லியாக்கத் அலி(36), அபுபக்கா் சித்திக்(21), சையத் அபுதாகீா்(21) ஆகியோரிடம் பரிசோதித்ததில் அவா்களுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.81.4 லட்சம் மதிப்பிலான 1.62 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சேர்ந்த ஜாகீா் உசேன்(40) என்பவர் ரூ.6.6 லட்சம் மதிப்புடைய யூரோ கரன்சியை கடத்த முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்த சுங்கத்துறையினர் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.