ETV Bharat / state

Gold Rate today: சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! - தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென 160 ரூபாய் உயர்ந்திருப்பது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

author img

By

Published : Aug 5, 2023, 2:15 PM IST

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

பொதுவாக ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் இருக்காது. அதனால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆடி மாதம் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை ஏற்றம் தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், கடந்த ஜூலை 21ம் தேதி தங்கம் விலை திடீரென சரிவைச் சந்தித்தது. ஒருநாளில் சவரனுக்கு ரூ. 320 குறைந்தது.

அதேபோல், ஜூலை 22ம் தேதி 120 ரூபாய் குறைந்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 3ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ. 44,280 விற்பனை ஆனது. அதேபோல் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து 5,535 ரூபாய்க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 4ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையான நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.44,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ. 5,555க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.78.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த மூன்று நாட்களில் ரூ. 280 குறைந்த தங்கம் விலை, இன்று திடீரென உயர்ந்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது. அதனால் இன்றைய விலையில் நாளையும் தங்கம் விற்பனை ஆகும். இந்த திடீர் விலை ஏற்றம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய தங்கத் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.