உலகை உலுக்கும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிப்படைந்துள்ளது. அதனால் தங்கத்தின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்த நிலையில், இன்று காலையில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்துவருகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை கிராம் ஒன்று ரூ.4 ஆயிரத்து 100 விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 94 உயர்ந்து 4 ஆயிரத்து 166 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.752 உயர்ந்து 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு 90 காசுகள் குறைந்து கிலோ ரூ. 53.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!