சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் கொழும்புவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மீன் ஆகியோரிடம் சோதனை நடத்தியதில் இருவரிடமும் சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 596 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.
இதனிடையே பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் குப்பை தொட்டியில் பாலித்தீன் பையில் கேட்பாடற்று தங்க கட்டிகள் இருப்பது மத்திய தொழிற்படை காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சுமார் 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தங்க கடத்தல் பிண்ணனியில் இருப்பவர்கள் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!