ETV Bharat / state

பேருந்தில் பயணித்த பேராசிரியரிடம் கைவரிசை!

சென்னை: பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பேராசிரியரிடமிருந்து 35 சவரன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

gold-and-money-theft
author img

By

Published : May 17, 2019, 12:34 PM IST

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பேராசிரியராக பணியாற்றுபவர் ஜான் கிருபாகரன். இவர் நேற்று இரவு தனது மனைவி பிரின்லியுடன் உறவினர் திருமணத்திற்கு கடலூர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி பேருந்தில் பயணித்துள்ளார்.

பேருந்தில் சென்று கொண்டிருக்கையில், சிறுது நேரம் உறங்கிய பேராசிரியர், மதுரவாயல் டோல்கேட் அருகே எழுந்து பார்த்தபோது 35 சவரன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்த பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார்.

கோயம்பேடு காவல்நிலையம்

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி கோயம்பேடு சென்று, அங்குள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் கல்லூரி பேராசிரியர் இடம் 35 சவரன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை. கோயம்பேடு காவல் நிலையத்தில்  புகார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பேராசிரியராக பணியாற்றிய ஜான் கிருபாகரன் என்பவர் நேற்று இரவு தனது மனைவி பிரின்லியுடன் உறவினர் திருமணத்திற்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கடலூர் செல்ல புதுச்சேரி பேருந்தில் பயணம் செய்தபோது மதுரவாயல் டோல்கேட் அருகே தீடீர் என்று  தனது பேக் காணவில்லை என்று பேராசிரியர் கூச்சலிட்டார்.

பின்பு பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பேராசிரியர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.