ETV Bharat / state

சென்னையில் அமைச்சர் வீடு அருகே வெள்ளம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடு அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் வீட்டருகே படகில் செல்லும் அவலம்

author img

By

Published : Nov 11, 2021, 12:29 PM IST

சென்னை: சென்னையில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடியாமல் உள்ளது. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 2001 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவரின் வீடு பட்டாளம் ஓட்டேரியில் உள்ளது.

2001 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டிற்கு அருகே மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் படகில் பயணம் செய்யும் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.