ETV Bharat / state

த.மா.கா.வின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

Gnanadesikan
Gnanadesikan
author img

By

Published : Jan 15, 2021, 2:31 PM IST

Updated : Jan 15, 2021, 5:29 PM IST

14:29 January 15

சென்னை: த.மா.கா.வின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஞானதேசிகன், நெஞ்சுவலி காரணமாக கடந்தாண்டு (2020) நவம்பர் 11ஆம் தேதி கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால், தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின்னர், உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி ஞானதேசிகன், இன்று(ஜன.15) பிற்பகல் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற அவர், டாக்டர் அம்பேத்கார் சட்ட கல்லூரியில் சட்டம் பயின்று வழங்குரைஞராகப் பணியைத் தொடங்கினார். 

காமராஜர் மீது கொண்ட பற்றால் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்து, தலைவர் பதவி வரை உயர்ந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, 2011 முதல் 2014 வரை பதவி வகித்தார். பின்னர், மூப்பனார் மீதுள்ள பற்றால் அவரால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். 

தனது அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் என்றும் சமரசம் செய்து கொள்ளாதவர். அதிர்ந்து பேசாமல் நாகரிகமான அரசியலுக்கும், அனைத்து கட்சியுடன் நட்பு பாராட்டக்கூடியவர் என்ற பெயர் பெற்றவரான ஞானதேசிகன், இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 15, 2021, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.