சென்னை : போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் வாகனங்களில் “G” அல்லது “அ” என்ற எழுத்துகளை பதிவு எண் பலகையில் பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் கண் கூசும் முகப்பு விளக்குகள், கூடுதலான முகப்பு விளக்குகள் பொருத்திய வாகனங்கள், பம்பர் பொருத்திய வாகனங்கள் மற்றும் கண்ணாடிகளில் கறுப்பு வண்ண ஃபிலிம் ஒட்டப்பட்ட வாகனங்களின் மீது தொடர் சோதனை மேற்கொண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : G போர்டு யாருக்கெல்லாம் அனுமதி - தமிழ்நாடு அரசு விளக்கம்!