ETV Bharat / state

wrestlers protest: மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை நேத்து தான் பார்த்தேன்.. பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. நடிகை நமிதா பேச்சால் சர்ச்சை! - சென்னை மாவட்ட செய்தி

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் முழு விவரங்களை நேற்று தான் பார்த்தேன் எனவும் குற்றவாளியாக பாவிக்கப்பட்டுள்ள அரசியல் தலைவருக்கு தன்னை நிரூபிக்க தயாராக இருக்கிற‌ போது, அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் நடிகை நமிதா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 2, 2023, 5:59 PM IST

பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் பாஜக எம்.பி.க்கு நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள் - நடிகை நமிதா

சென்னை: அண்ணாநகரில் இயங்கி வரும் "ப்ரோ மேக்கப்" மணப்பெண் அலங்கார நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாகத் திரைப்பட நடிகை நமிதா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை நமிதா, “பல வருடத்திற்குப் பிறகு இந்த மேக்கப் நிறுவனத்தைப் புதிதாக மறுசீரமைப்பு செய்து தொடங்கி இருக்கிறோம். பல நூறு இடங்கள் இருந்த போதிலும் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் அங்கு பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்படுகின்ற நிலையில் பணம் அதிகமாகச் சம்பாதிப்பதற்காக சில மேக்கப் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கே 45 நாள் வகுப்பு எடுக்கப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுப்பு எடுக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் தனித்துச் செயல்படுவதற்காகவும் பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்காகவும் இது போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த நடிகை நமிதா, “மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதை நேற்று தான் முழு விவரங்களையும் பார்த்தேன். குற்றவாளியாகப் பாவிக்கப்பட்டுள்ள அரசியல் தலைவருக்குத் தன்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிற‌ போது, அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்” எனக் கூறினார்.

மாமன்னன் படத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று உதயநிதி சொல்லி இருப்பது பற்றி கேள்விக்குப் பதிலளித்த நடிகை நமிதா, “அது அவருடைய தனிப்பட்ட விருப்பம், எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இந்த கேள்விக்குப் பதில் அளிக்க விருப்பமில்லை” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய நமிதா, “எம்பி தேர்தலில் நான் நிற்க போவதில்லை. அந்த விருப்பம் இப்போது எனக்கு இல்லை. மைசூர் சிங்கமாக இருக்கிற அண்ணாமலையுடன் இணைந்து கட்சிக்காக பணியாற்றுவதே என்னுடைய நோக்கமும், ஆசையுமாக உள்ளது” எனக் கூறினார்.

தேசிய அளவில் சுமார் ஒரு மாதமாக விளையாட்டு வீரர்கள் போராடி வருவதை நேற்று தான் முழுமையாக பார்த்தேன் என்று நடிகை நமிதா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி" - ஈபிஎஸ் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.