ETV Bharat / state

கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை: கல்லூரி மாணவர் கைது - சென்னை மாணவி தற்கொலை

மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை கல்லூரி மாணவர் கைது
சென்னை கல்லூரி மாணவர் கைது
author img

By

Published : Dec 20, 2021, 4:57 PM IST

சென்னை: பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி மாங்காட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அந்த மாணவி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது தற்கொலைக்கு பாலியல் அத்துமீறல் காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மங்காடு காவல் துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்துவிசாரித்தனர். மாணவியின் செல்போனில் கடைசியாகப் பேசிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை தனிப்படையினர் பிடித்தனர்.

விசாரணையில், "மாங்காட்டைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21), அதிகமாக அந்த மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தது தெரியவந்தது. அவர் குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.

அந்த மாணவியை விக்னேஷ் காதலித்துவந்துள்ளார். விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் உயிரிழந்த மாணவிக்கும், விக்னேஷுக்கும் வாக்குவாதம் முற்றியது. உடனே விக்னேஷ் அந்த மாணவிக்கு ஆபாச படங்கள், அனுப்பியுள்ளார். மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் நடந்துகொண்டுள்ளார்" என்பது தெரியவந்தது.

விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.

இதையும் படிங்க: தரமற்ற உணவு சமைத்து அளித்த கிச்சன் மேற்பார்வையாளர்கள் இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.