சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் குகன், காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் ஒரு காரில் புடவைகள், சால்வைகள், தாம்பூலங்கள் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், ஒன்பதாவது மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல் துறையினரும், தேர்தல் அலுவலரும் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் அனைத்து செட்டியார்கள் சங்க மாணவரணி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் என்பது தெரிந்தது. ராயப்பேட்டையில் நடைபெற்ற செட்டியார்கள் மாநாட்டில் இவர் கலந்துகொள்ள வந்ததும் தெரியவந்தது.
மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு செட்டியார் பேரவை சங்கத்தின் சார்பாக புடவை, சால்வை, தாம்பூலம் ஆகியவற்றை வழங்கியது போக மீதமிருந்ததை நாமக்கல் கொண்டுசென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல்செய்யப்பட்ட 50 புடவைகள், 30 தாம்பூலங்கள், 20 சால்வைகள் ஆகியவற்றை விசாரணைக்குப் பிறகு ஒப்படைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ராஜபாளையத்தில் ரூ.4,84,190 பறிமுதல்!