ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் என்பவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், "புவிசார் குறியீட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி நபர் குழுவில் தான் இடம்பெற்றுள்ளதாகவும், மைசூர் பாககுவிற்கான புவிசார் குறியீட்டு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த பதிவை பார்த்து கொந்தளித்த கர்நாடக மக்கள் மீடியாக்களில் ஆக்ரோஷமாக பேட்டியளிக்க தொடங்கினார். கர்நாடகாவைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் இனி தமிழ்நாட்டுக்கு மைசூர் பாகு வினியோகிக்க மாட்டோம் எனவும் காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் உண்மை நிலை குறித்து புவிசார் குறியீடு நிறுவனத்தின் துணைப் பதிவாளர் சின்னராஜாவை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், "மைசூர் பாகுவிற்கு புவிசார் குறியீடு கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை. இது ஒரு பொய்யான தகவலாகும். புவிசார் குறியீடு பெறுவது என்பது பல்வேறு நிலைகளை கொண்டது உடனடியாக அதெல்லாம் கிடைத்துவிடாது.
பொய்யான தகவல் பரவியதால் எனக்கு அடையாளம் தெரியாத நபர்கள் ஃபோன் செய்து வசைபாடி வருகிறார்கள். கர்நாடக மக்கள் உண்மை நிலையை புரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர் பெயரை உபயோகித்தும் அரசு நிறுவனத்தின் பெயரை உபயோகித்து பொய்யான தகவலை அவர் பரப்பியுள்ளார். தனிநபர் கமிட்டி என்று ஒன்று அமைக்கப்படவில்லை. அவர் யாரென்று எனக்கு தெரியாது. புவிசார் குறியீடு மத்திய வர்த்தக துறையின் கீழ் இயங்கிவருகிறது. ஆகவே இந்த சம்பவம் குறித்து துறை மூலம் விசாரணை நடக்கும்" என்றார்.