ETV Bharat / state

'மருத்துவர்களுக்காக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்' - டாக்டர் ரவீந்திரநாத்

சென்னை: கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (ஏப்ரல் 22) இரவு 9 மணிக்க வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'மருத்துவர்களுக்காக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்' - டாக்டர் ரவீந்திரநாத்
'மருத்துவர்களுக்காக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்' - டாக்டர் ரவீந்திரநாத்
author img

By

Published : Apr 21, 2020, 7:55 PM IST

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள கணொலியில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் அவரச் சட்டம் கொண்டு வரவேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கி உயிரிழந்த, மருத்துவர்களின் உடல்களைக் கௌரவமான முறையில் அடக்கம் செய்ய முடியவில்லை என்பது அவமானத்திற்குரியது.

அப்படி உயிரிழந்த மருத்துவர்களான சைமன், லெட்சுமி நாராயண ரெட்டி, ஜெயமோகன் ஆகியோரின் உடல்களுக்கு கௌரவமான முறையில் இறுதி சடங்குகள் நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டற்கு தமிழ்நாடு அரசே காரணம். மருத்துவர்களை அவர்களது இறப்பிற்குப் பின்பும் அவமானப்படுத்துவது மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் அவர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

'மருத்துவர்களுக்காக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்' - டாக்டர் ரவீந்திரநாத்

உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த வேண்டும். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 22) இரவு 9 மணிக்கு, நாடு தழுவிய முறையில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு நடத்தவிருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும், வெகுமக்கள் அமைப்புகளும், சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்கள் வீட்டு வாசலிலோ, மொட்டை மாடியிலோ 10 நிமிடங்களுக்கு மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏந்தி ஆதரவு தர வேண்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா இறப்பை ஆய்வு செய்ய குழு - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.