ETV Bharat / state

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பங்களிப்புடன் ‘காசி தமிழ் சங்கமம்’

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவுசார் பங்களிப்புடன் ‘காசி தமிழ் சங்கமம்’ இணைந்து நடத்தும் இலவச சுற்றுலா ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெறுகிறது.

காசிக்கு இலவச சுற்றுலா செல்லலாம் வாங்க!....-சென்னை ஐஐடி

author img

By

Published : Oct 24, 2022, 9:03 AM IST

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவுசார் பங்களிப்புடன் ‘காசி தமிழ் சங்கமம்’ இணைந்து நடத்தும் இலவச சுற்றுலா டிசம்பர் 16 முதல் 20 டிசம்பர் ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 12 வெவ்வேறு இடங்களில் இருந்து 3,000 சிறப்பு விருந்தினர்கள் காசியைப் பார்வையிட அழைத்து செல்லப்பட உள்ளனர். தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கமாகும்.

தமிழ்நாட்டின் 12 வெவ்வேறு இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர்கள் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து 12 வெவ்வேறு நாட்களில் ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகள் மூலம் பல்வேறு குழுக்களாக காசிக்குப் புறப்படுவார்கள். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டுத் திரும்பிவர மொத்தம் 8 நாட்கள் ஆகும்.

இந்தப் பயணத் திட்டத்தின்படி, விருந்தினர்கள் அனைவரும் காசி, அயோத்தி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்வையிடுவதுடன், கங்கை ஆற்றில் படகுசவாரியும் மேற்கொள்வார்கள். விருந்தினர்கள் அனைவருக்கும் பயணச் செலவு இலவசம். அத்துடன் காசி மற்றும் அயோத்தியில் தங்குமிட வசதியும் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் https://kashitamil.iitm.ac.in/ வலைதளத்தில் உடனடியாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான விவரங்கள் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை - வேலூரில் குவிந்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.