தஞ்சை குளங்களில் கிடைக்கும் ஒரு விதமான நெட்டி என்ற செடியைக் கொண்டு நெட்டி கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் உள்ள அரும்பாவூர் என்ற கிராமத்தில் செய்யப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் பிரபலமானவை. மாமரம், வேப்பமரம், ரோஸ் வுட் மரம், சாம்பல் மரம் ஆகியவற்றைக் கொண்டு சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
2013ஆம் ஆண்டு இவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகம் (பூம்புகார்) சார்பாக விண்ணப்பிக்கபட்டது. இதுகுறித்து அப்பகுதியில் புவிசார் வல்லுநர் குழு ஆய்வுசெய்து, தற்போது புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடாக அங்கீகரிக்கப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை நெட்டி, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு! - geographical index tag for thanjavur netti
சென்னை: தஞ்சாவூர் நெட்டி கைவினைப் பொருள்கள், அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.