ETV Bharat / state

பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது! - engineering students

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

general-category-counseling-for-engineering-students-starts-tomorrow
பொறியியல் மாணவர்களுக்கான பொது பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது ...
author img

By

Published : Jul 27, 2023, 10:05 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 9-ம் தேதி வரையில் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி தமிழக உயர் கல்விதுறை அமைச்சர் பென்முடி வெளியிட்டார்.

தற்பொழுது மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றதைத் தொடர்ந்து பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு சுற்றுக்கான விரிவான கால அட்டவணை www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவுள்ள பொது கலந்தாய்வில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம்.இதில் தரவரிசைப் பட்டியலில் 1 இடம் தொடங்கி 22,761 இடம் வரையில் உள்ள மாணவர்களும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசைப் பட்டியலில் 1 இடம் தொடங்கி 1,074 இடம் வரையில் உள்ள மாணவ மாணவர்களும் பங்கேற்கலாம்.

தொழிற்கல்விப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் 1 இடம் முதல் 2,215 இடங்கள் வரையில் உள்ளவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதேபோன்று தொழிற்கல்விப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தரவரிசைப் பட்டியலில் 1 இடம் முதல் 559 இடம் வரையில் உள்ள மாணவ மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

அதேபோல் நடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில் சிறப்பு ஒதுக்கீட்டில் 685 இடங்கள் நிறைவடைந்தது. இந்த கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆங்கில கால்வாயை இருமார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் புரிந்த தமிழக மாணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.