சென்னை: இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (ஜூலை 23) வந்தது. இந்த விமானத்தில் பெருமளவு கடத்தல் பொருள்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகளின் தனிப்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். இந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த நைமுதீன் (24) சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்திருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரை முழுமையாக பரிசோதித்தினர். இதையடுத்து அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, எதையோ விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, வயற்றுக்குளிருந்த சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை வெளியில் எடுத்தனர். அப்படி மொத்தமாக 1,746 ரத்தின கற்கள் சிக்கின. இதன் மொத்த எடை 8309 காரட். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 94. 34 லட்சம். இந்தியாவில் இந்த ரத்தின கற்கள் மதிப்பு சுமாா் ஒரு கோடி ரூபாய் .
இதையும் படிங்க: அயன் பட பாணியில் போதை பொருள் கடத்திய நபர் கைது