ETV Bharat / state

திருமழிசைக்கு இடமாறும் கோயம்பேடு சந்தை

author img

By

Published : May 5, 2020, 12:59 AM IST

சென்னை : கோயம்பேடு சந்தை கரோனா வைரஸ் பரவலின் கூடாரமாக மாறிவிட்டதால், வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமையும் தற்காலிக சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thirumazhisai
Thirumazhisai

சென்னை கரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், கேயம்பேடு சந்தை கரோனா வைரஸ் பரவலின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு பணிசெய்து விட்டு ஊர்திரும்பிய பல தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து நேற்று முதல் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டும் என சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் கொள்முதல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 24 கி.மி தூரத்தில் அமைந்துள்ள திருமழிசை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். திருமழிசை ஆழ்வார் பிறந்த மண் இது. இங்கு அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாத பெருமாள், ஆழ்வார் திருக்கோயில், பெருமாள் திருக்கோயில் ஆகிய முக்கிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே வெள்ளவேடு, குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.

முன்னதாக, சென்னை அருகே துணைக்கோள் நகரம் உருவாக்க வேண்டும் என ரூ. இரண்டு ஆயிரத்து 160 கோடி மதிப்பீட்டில் திருமழிசையில் 311 ஏக்கர் அளவில் நகர் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த துணைக்கோள் நகரத்தில்தான் கோயம்பேட்டிலிருந்து புதிய சந்தை அமைைக்கப்படவுள்ளது. வியாபாரிகள் அனைவரும் இங்கு வந்து உடனடியாகப் பொருட்களை வாங்கக் கூடிய வகையில் அங்காடிகள் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

வரும் ஏழாம் தேதி முதல் இங்கு பொருள்கள் விற்பனை தொடங்க உள்ளது. திருமழிசை பகுதிக்கு சந்தை மாற்றப்படுவதால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட வணிகர்களின் போக்குவரத்து சிரமம் தவிர்க்கப்படும். மேலும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்திலிருந்து வரும் சரக்கு போக்குவரத்தும் எளிதாகக்கூடும். இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.