ETV Bharat / state

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டிய 318 நபர்கள் மீது வழக்குப்பதிவு - Chennai Corporation

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கடந்த 2 வாரங்களில், சுவரொட்டி ஒட்டிய 318 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 30, 2022, 6:52 AM IST

சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019இன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அக்.16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8,48,400 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.7,28,900 அபராதமும் மாநகராட்சி சார்பாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 318 நபர்களுக்கு ரூ.1,31,500 அபராதம் விதிக்கப்பட்டும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் உள்ளது.

இதையும் படிங்க: அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் - வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.