ETV Bharat / state

குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்
குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்
author img

By

Published : Sep 22, 2021, 7:04 AM IST

சென்னை: மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது.

குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

எனவே, பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எறிதல் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநகராட்சி எச்சரிக்கை

மேலும், திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்கள் மீதும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வன எல்லைகளில் கான்கிரீட் சுவர் கட்ட நிதி ஒதுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.