சென்னை வடபழனி, குமரன் காலனி, 6 வது தெருவில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, தி.நகர் துணை ஆணையர் தனிபடை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர், வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.
அங்கு 5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்(19) , மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேஜஷ் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல்!