சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் சேலையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த துஷார் (23), ஜித்தின் (24) என்பதும், அவர்கள் திருநீர்மலை பகுதியில் வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு அருகே இரண்டு நபர்களிடம் வழிப்பறி செய்த ஆறு பேருக்கு போலீசார் வலைவீச்சு