சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள ஜோதி திரையரங்கம் அருகே கடந்த சில நாட்களாக வாகனம் ஒன்று தனியாக நிற்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்த முற்பட்டபோது, அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் வாகனத்தை சோதனை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வாகனத்தை திறந்து பார்த்தபோது உள்ளே பல லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. வாகனத்தின் உரிமையாளர் யார் என்றும், கஞ்சா எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.