சென்னை: இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழு கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு பிரத்யேக பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டம் ஜி 20 நாடுகள் மற்றும் அவற்றின் சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைத்து அறிக்கையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது பேரழிவு அபாயத் தணிப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பேரழிவுகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஜி 20 நாடுகளின் ஒத்துழைப்பில் பேரழிவு அபாயத் தணிப்பை பிரதானப்படுத்த வேண்டும்.
ஜி 20 பிரதிநிதிகள் மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பார்வையிடவும், பிராந்தியத்தின் வளமான கலாசார பாரம்பரியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் பேரழிவுகளின் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும். பேரிடர் அபாயத் தனி பணிக்குழுவின் (DRRWG) மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்க கூட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். 'சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரழிவு அபாயத் தணிப்பில் அவற்றின் பயன்பாடு' குறித்த ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது DRRWG-க்கு இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்த ஆழமான புரிதலைப் பகிர்ந்து கொள்ளும். ஃபெமா, இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (PNPP), இந்தியா, தேசிய புனல் மின் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மைக்ரோசாப்ட் இந்தியா, தமிழக அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற அதிகாரிகள் குழு விவாதத்தில் அங்கம் வகித்தனர்.
பேரிடர் மேலாண்மை குறித்து முதலில் ஜி-20 நாடுகளுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்கு குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் பேரிடரை தணிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
கரோனா தொற்று ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டது. அதேபோன்று புயல், வெள்ளம் போன்ற காலங்களிலும் பேரிடரை எதிர்கொள்வதற்கு மக்களுக்கு ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : CM Stalin letter: வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்!