ETV Bharat / state

G 20: பேரிடர் மேலாண்மையில் இந்தியா பல மாற்றங்களைக் கொண்டுள்ளது - பிரதமரின் முதன்மைச் செயலர்

''பேரிடர் மேலாண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நாம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். அதன் மூலம் ஏராளமானவற்றை கற்றுள்ளோம். பேரிடரை தவிர்ப்பதற்கு தொழில்நுட்பமும் உதவியாக உள்ளது'' என பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

G20 Disaster Risk Reduction Final Meeting in Chennai Prime Minister Principal Secretary P K Mishra Speech
ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம்
author img

By

Published : Jul 24, 2023, 2:51 PM IST

ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம்

சென்னை: இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் இன்று முதல் 26 வரை சென்னையில் நடைபெறுகிறது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு பிரத்யேக பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

சென்னையில் நடைபெறும் 3வது கூட்டத்தை துவக்கி வைத்து இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா பேசும்போது, ''காந்தி நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் சந்தித்தோம். அதன் பின்னர் உலகம் வரலாறு காணாத சில பேரழிவுகளைக் கண்டது. கிட்டத்தட்ட முழு வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நகரங்கள் வெப்ப அலைகளின் பிடியில் உள்ளன.

கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மூடுபனி வட அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள நகரங்களை பாதித்தது. இங்கே இந்தியாவில், நமது கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் பெரிய புயலால் பாதிக்கப்பட்டதைக் கண்டோம். டெல்லியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்.

காலநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகளின் தாக்கங்கள் தொலைதூர எதிர்காலத்தில் இல்லை. அவைகள் ஏற்கனவே இங்கே இருக்கின்றன. பேரழிவுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை உலகம் முழுவதும் பாதிக்கின்றன. உலகம் எதிர்கொள்ளும் சவால் இந்தப் பணிக்குழுவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

இந்தப் பணிக்குழுவில் 4 மாதத்தில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த பணிக்குழுவின் லட்சியம் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் அளவோடு பொருந்த வேண்டும். படிப்படியாக மாற்றத்தை உருவாக்கலாம் என்பதற்கான நேரம் கடந்துவிட்டது. புதியப் பேரிடர் அபாயங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள பேரிடர் அபாயங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.

பேரிடர் அபாய தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அனைத்து நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடைவடிக்கை கொடுக்கப்படுவதோடு, பேரிடரிலிருந்து மீண்டு வர தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தனியார் துறை முதலீடுகளை பேரிடர் அபாய குறைப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு எப்படி ஈர்ப்பது என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டிய தேவை உள்ளது.

புயலுக்குத் தயாராக இருப்பதை போலவே அதற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்ப தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். இதுவரை நாட்டின் பல்வேறு நகரங்களில் 177 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும்” என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமரின் முதன்மைச்செயலாளர் பி.கே.மிஸ்ரா, “3வது கூட்டம் தமிழகத்தில் கூடி உள்ளது. தமிழ்நாடு கடந்த காலங்களில் ஏராளமான பேரிடர்களை சந்தித்துள்ளது. அதன்மூலம் தமிழ்நாடு ஏராளமானவற்றை கற்றுக் கொண்டுள்ளது. நான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

ஜி20 தலைவர்கள் கூட்டம் சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தில் யார் முன்னோக்கி உள்ளனர், பின்னோக்கி உள்ளனர் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் என்பது இந்தியா மட்டுமன்றி உலகளாவியது. இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன.

பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியா நல்ல எதிர்காலத்தை கொண்டுள்ளது. பேரிடர் மேலாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நாம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். அதன் மூலம் ஏராளமானவற்றை கற்றுள்ளோம். பேரிடரை தவிர்ப்பதற்கு தொழில்நுட்பமும் உதவியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது நிலப்பிரபுத்துவ காலத்திய VRA முறை - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.