ETV Bharat / state

எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையிலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் இலங்கை விமானங்கள்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால், சென்னை விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றன, இலங்கை விமானங்கள்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு சென்னையிலிருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்லும் இலங்கை விமானங்கள்

author img

By

Published : Jun 1, 2022, 8:07 PM IST

சென்னை, இலங்கையில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லை. அதனால் இலங்கையிலிருந்து மெல்போர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு வழியில் எரிபொருள் நிரப்ப சென்னை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் உள்ள எரிபொருள் கிடங்கில் எரிபொருள் நிரப்புவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருளுக்கான தொகையை இலங்கை விமான நிறுவனங்கள் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மே மாதம் 23ஆம் தேதி கொழும்பிலிருந்து டோக்கியோ சென்ற இலங்கை விமானம் சென்னை விமான நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, அதற்கு வேண்டிய எரிபொருளை நிரப்பிக்கொண்டு மீண்டும் டோக்கியோ சென்றது.

அதேபோல் மே மாதம் 27ஆம் தேதி இலங்கையில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்றது. மேலும் இலங்கையில் இருந்து ஃபரான்க்பட் மற்றும் சிட்னிக்கு சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விமான நிலைய இயக்குநரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கு செல்லும் விமானங்களில் போதுமான அல்லது தேவையான எரிபொருளை டேங்கரில் நிரப்பிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ’என் உயிரின் உயிரேவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ - ஹாரிஸ் ஜெயராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.