சென்னை: சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், வெல்டிங் துறையில் முன்னணி நிறுவனமான ஃப்ரோனியஸ் (fronious) இந்தியாவில் முதன்முறையாக திறன் மேம்பாட்டு மையத்தை நேற்று(ஏப்.27) தொடங்கியது. இதனை ஃப்ரோனியஸ் இந்தியாவின் இயக்குநர் வி.வி.காமத் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம், இந்த மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பத்தில் உள்ள நவீன உபகரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்பப் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு, தொழில்துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெல்டிங் நிபுணர்களுக்கு ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், விமானம் மற்றும் ராக்கெட் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உலகளவில் கொட்டிக் கிடப்பதாகவும், இவர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2023-24 கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
இதையும் படிங்க: ஜூன் 5ல் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!