சென்னை: சமீப காலமாக நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அததியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது வரலாறு காணதாத வகையில் பெட்ரோல் 103 ரூபாய், டீசல் 99.59 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. மேலும் வெங்காயம் 70க்கும், தக்காளி 65க்கும் என விலை உயர்ந்து விற்பனையாகிறது.
அசத்திய நண்பர்கள்
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகதியைச் சேர்ந்த கவிபாரதி - சுமித்ரா ஆகியோரின் திருமண நிகழ்ச்சி ஓரகடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் மணமக்களுக்கு அன்பளிப்பாக இரண்டு லிட்டர் பெட்ரோல், இரண்டு லிட்டர் டீசல், இரண்டு கிலோ வெங்காயம், இரண்டு கிலோ தக்காளி ஆகியவற்றை வழங்கினர்.
மிரட்டும் பதாகை
இதேபோன்று கரோனாவே பார்த்து மிரண்டு ஓடும் வகையில் வரவேற்பு பதாகைகள் வைத்து காண்போரை நகைப்பில் ஆழ்த்தியுள்ளனர். பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தன.
அதில், “அம்பத்தூரில் பரபரப்பு, I.T. ஊழியருக்கு தொற்று உறுதி, இதற்கு சிகிச்சை, நண்பா நீ போராட வேண்டியது கரோனாவுடன் அல்ல மனைவி சுமித்ராவுடன்” என வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில், “இப்படிக்கு “கொலைவெறி கரோனா குரூப்ஸ், திருமணம் ஆகாதோர் நல சங்கம்” எனவும் தங்களது நக்கலான குறும்புத்தனத்தை வாசகங்களில் காட்டியுள்ளனர் மணமகனின் நண்பர்கள். இவர்கள் கொடுத்த அன்பளிப்பும், வைத்த வரவேற்பு பதாகையும் காண்போரை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்