சென்னை: வியாசர்பாடியை சார்ந்த +2 மாணவி காயத்ரி, பெரம்பூரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 592 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். எளிய குடும்பப் பின்னணியை கொண்ட மாணவியின் சாதனைக்காக சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிக்கு இலவசமாக கல்லூரியில் இடம் வழங்க முன்வந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (மே 17) முதல் சென்னை எத்திராஜ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. முதல் சேர்க்கையாக மாணவர் காயத்திற்கு கல்லூரி சார்பில் மாணவிக்கு கல்லூரியில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு மாணவி காயத்ரி அளித்த பிரத்யேக பேட்டியில், "எம்.ஹெச். ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து, நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாநகராட்சியில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இதைவிட மற்றொரு மகிழ்ச்சி என்னவென்றால், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படிப்பதற்கு எனக்கு இலவசமாக இடம் கிடைத்தது தான் என்று உற்சாகத்துடன் கூறினார். தேர்வு முடிவுகள் வெளியானபோது, உறவினர்களுக்கு முன்பாகவே தொடர்புகொண்ட இக்கல்லூரியின் முதல்வர், 'நீங்கள் விரும்பும் எந்த மேற்படிப்பாகவும் இருந்தாலும் சரி நாங்கள் இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறோம்' என்று கூறியதைக் கேட்டதை நம்ப முடியவில்லை.
இதையும் படிங்க: புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழரின் பாரம்பரிய உடையில் தோன்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
இவ்வளவு பெரிய கல்லூரியில் இருந்து அழைப்பு வருமென நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்கவே இல்லை என்றார். மேலும், இந்த நிகழ்வு ஒரு எதிர்பாராத நிகழ்வாகவே நடந்ததாக கூறிய காயத்ரி, தனது தாயாரும் ஆரம்பத்தில் மேற்படிப்புக்கு அதிக செலவாகுமோ? நல்ல கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா? என பயந்து கொண்டு இருந்த நிலையில், இந்த எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இடமளித்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக மீண்டும் தெரிவித்தார்.
கடந்த வாரம் சாரும், பள்ளி முதல்வரும் கூட மேற்படிப்பு தொடர்பாக, மிகவும் எளிமையாக என்னிடம் பேசியதாக கூறியதோடு, இவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர்கள் இவ்வாறு அன்பாக உரையாடியதாக மாணவி காயத்ரி தெரிவித்தார். மேலும் பேசிய மாணவி காயத்ரி, தற்போது பி.காம் (பொதுப்பிரிவு) (B.Com (General)) எடுத்துள்ளதாகவும், இதன் பிறகு சி.ஏ. (CA - Chartered Accountant) எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவரின் தாய் லட்சுமி கூறும்போது, சென்னை மாநகரின் சிறப்பு வாய்ந்த எத்திராஜ் கல்லூரியில் தங்கள் மகளுக்கு இடம் கிடைத்தது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: CBSE 12th தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த வேலூர் மாணவி ரேவா!