ETV Bharat / state

நாளை முதல் ஜூன் 30 வரை அம்மா உணவங்களில் இலவச உணவு - eps latest news

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Jun 18, 2020, 12:27 PM IST

Updated : Jun 18, 2020, 2:24 PM IST

12:24 June 18

சென்னையில் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல்  மே 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. அதையடுத்து தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் அப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்கப்படும். 

மேலும் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமைத்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை (19.6.2020) முதல் 30.6.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கைப் பயன்படுத்தி கரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

Last Updated : Jun 18, 2020, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.