சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 6.5 லட்ச மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தினை சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (ஜூலை 25),தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 6.5 லட்சம் பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது...