ETV Bharat / state

வங்கிக்கு டிமிக்கி கொடுத்து கார் வாங்கிய 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை!

போலி ஆவணங்களை கொடுத்து கார் லோன் பெற்று ஏமாற்றிய ஐந்து பேருக்கு, தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வங்கியில் கடன்  போலி ஆவணம்  போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன்  சென்னையில் போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன்  போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்றவர்கள் கைது  சென்னை செய்திகள்  குற்றச் செய்திகள்  பண மோசடி  மோசடி  வங்கியில் பண மோசடி  chennai news  chennai latest news  crime news  accused arrest  fake document  bank loan  fraud on bank loan  fraud on bank loan with fake document  money fraud
வங்கியில் கடன்
author img

By

Published : Aug 14, 2021, 4:24 PM IST

சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு தனியார் வங்கியொன்றின் முகப்பேர் கிளையில், ஸ்கார்பியோ கார் வாங்க ரூபாய் 3 லட்சம், ஹூண்டாய் கார் வாங்க ரூபாய் 4 லட்சம், குவாலிஸ் கார் வாங்க ரூபாய் 4.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு கார்கள் வாங்காமலேயே இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியை ஏமாற்றியுள்ளனர்.

5 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக நல்லூரைச் சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி சபிதா தேவி, அவர்களது கூட்டாளிகளான மடிப்பாக்கத்தை சேர்ந்த வித்யகுமார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நித்யகுமார், நங்கநல்லூரை சேர்ந்த திருப்பதி ராஜா ஆகிய ஐந்து பேர் மீது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மோகன சுந்தரம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் புலன் விசாரனை மேற்கொண்டு, சுந்தரம் மீது மூன்று வழக்கும், வித்யாகுமார் மீது இரண்டு வழக்கும், சபிதா தேவி, திருப்பதி ராஜா, நித்யகுமார் ஆகிய மூவர் மீதும் தலா ஒரு வழக்கும் பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.

மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு காவல் துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, முறையாக சாட்சிகளை நீதிமன்றம், முன் நிறுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கபட்டு வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கையால் வழக்கின் விசாரணை முடிந்து இன்று (ஆக 14) தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை

அதில், சுந்தரம் என்பவருக்கு 3 வழக்குகளில் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், விஜய குமாருக்கு இரண்டு வழக்குகளில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் சபிதா தேவி, திருப்பதிராஜா, நித்யகுமார் ஆகியோருக்கு ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.