ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காக்கி நாடாவிலிருந்து வந்த ரயிலில் சோதனை செய்தபோது, 4 பேர் காவல் துறையிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (26), பிரகாஷ் (24), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (22), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் நான்கு பேரும் காக்கிநாடாவிலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்ய வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வீட்டிற்கு அனுப்ப பணமில்லை... கஞ்சா விற்பனையை கையிலெடுத்த மூவர் கைது!