ETV Bharat / state

வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி; 4 மகளிரின் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஈபிஎஸ்

author img

By

Published : Feb 5, 2023, 5:21 PM IST

பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்குகொண்டு இலவச வேட்டி,சேலை வாங்க முயன்ற வயது முதிர்ந்த 4 மகளிரின் உயிரிழப்புக்கு, அரசு பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி
வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை: பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் நேற்று (பிப்.4) விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டனர். அதன் பின்னர் அங்கு நிலவிய கூட்ட நெரிசலில் சிக்கி வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையினால் வயது முதிர்ந்த 4 அப்பாவி மகளிர் பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி நேற்று (பிப்.4) வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.

பிப்.4ஆம் தேதி பிற்பகல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் கூடியிருக்க மாட்டார்கள்.

கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள். நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த விடியா திமுக அரசுதான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வற்புறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.