சென்னை, தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் கரசங்கால் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சித்ரா(35), திலகா(40), பூர்ணிமா (12 ), கலை (16), சத்யா (13) ஆகியோர் துணிதுவைக்கச் சென்றுள்ளனர். அப்போது, சத்யா தவறுதலாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார்.
உடனே ஒவ்வொருவராக சத்யாவை காப்பாற்ற முயன்று அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இது குறித்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சித்ரா, பூர்ணிமா, கலை, சத்யா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், திலகா ஒருவர் மட்டும் மயக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நால்வரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏரியில் துணி துவைக்கச் சென்ற நால்வர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.
இதையும் படிங்க:குளிக்கச் சென்றவர் இடிதாக்கி உயிரிழப்பு!