சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை டெம்பிள் டவுன் சாலையில் ஜெயசூர்யா (22) என்பவர் வசித்துவருகிறார். இவர் பேட்மிண்டன் பயிற்றுநராகப் பணிபுரிந்துவந்தார். இவருடன் பிரகாஷ்ராஜ் (21), விக்கி (எ) எழிலரசன், நாகராஜ் ஆகிய நண்பர்கள் உடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் ஜெயசூர்யாவின் நண்பர்கள் மூவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்துள்ளனர். பின்னர் அதனை வீட்டிலேயே வைத்து பொட்டலம் போட்டு விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சங்கர் நகர் காவலர்கள் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.
பின்னர் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : யார் இந்த சிடி மணி - என்கவுன்டர்தான் காவல் துறையினரின் திட்டமா?