சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிவேல். இவர் எர்ணாவூர் கடற்கரை அருகே மாவா பாக்கு விற்பனை செய்து கொண்டிருந்த போது, எண்ணூர் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் படி, மொத்த வியாபாரிகளான லூர்துசாமி, ஜானகிர் ராமன், லோகநாதன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம், 11 கிலோ மாவா தயாரிப்பதற்கான ஜர்தா மாவா பாக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்கள் வீடுகளில் ஜர்தா மாவா பாக்குகளை தயாரித்து அதை புகையிலையுடன் சேர்த்து, சிறு சிறு பொட்டலங்களாக பொதுமக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - போதை ஆசாமி போக்சோவில் கைது!