சென்னை, ஆவடி கோவில்பாதை வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் முரளி (34). இவரிடம் சென்னை கிண்டியில் இயங்கும் குறு, சிறு தொழில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, திண்டுக்கல் வத்தலகுண்டைச் சேர்ந்த ஜெபராஜ் (58), விருதுநகரைச் சேர்ந்த வெங்கடேசன் (34), ஆகியோர் 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதையறிந்த முரளி, சென்னை காவல் ஆணையரிடம் முன்னதாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
மேலும்,அவர்களுக்கு உதவியாக இருந்த திண்டுகல்லைச் சேர்ந்த நிர்மல்குமார் (26), விருதுநகரைச் சேர்ந்த அய்யாசாமி (56) ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு இனோவா கார், போலி பணி நியமன ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ரூ. 10 லட்சம் மோசடி புகார் - வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு