ETV Bharat / state

பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது - Four accused arrested

காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் கைது
author img

By

Published : Oct 26, 2021, 9:02 PM IST

புதுச்சேரி: காரைக்கால் அருகேவுள்ள திருநள்ளாரில் கடந்த 22ஆம் தேதி இரவு பாமக மாவட்ட செயலாளர் தேவமணி (53) படுகொலை செய்யப்பட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து தேவமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டகமாக முக்கிய குற்றவாளியான மணிமாறன் (28) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

முக்கிய குற்றவாளிகள் கைது

அப்போது, தேவமணிக்கும், மணிமாறனுக்கும் இடையே 2018ஆம் ஆண்டு முதல் இடத்தகராறு இருந்து தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக தேவமணி கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டதை மணிமாறன் ஒப்புக்கொண்டார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிமாறன் உள்பட கலியமூர்த்தி (59), ராமச்சந்திரன் (54), அருண் (31) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குற்றவாளிகள் கைது

பின்னர் அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாமக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.