ETV Bharat / state

நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்ட குடிநீர்த் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - குடிநீர் திட்டங்கள்

சென்னை: நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Foundation stone laying ceremony for Neyveli mining water based drinking water projects

author img

By

Published : Dec 22, 2020, 1:27 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5.58 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

தொடங்கி வைத்த திட்டங்கள்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை கொண்டு 20 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தைச் சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சிக்கு அம்ருத் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 59 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் திட்டம்,

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காங்கேயம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 69 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய சிறப்புத் தங்குமிடம்,

சென்னை, திருவல்லிக்கேணி, மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற சமூக சுகாதார மையத்திற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்தளம் என மொத்தம் 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.