சென்னை: இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "அண்ணாப் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் செமஸ்டர் தேர்வை சிறப்பான முறையில் நடத்தியது.
தற்போது, 3 மணி நேரத்திற்கு அரசு அறிவித்துள்ள மறுத்தேர்வு மாணவர்கள் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மறுதேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
மறுதேர்வு நடத்தும் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவிற்கு உள்ளது. துறை சார்ந்த அமைச்சர் அல்லது செயலாளருக்குத் தேர்வு குறித்து முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வியில் ஊழல் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!