ETV Bharat / state

உதயசந்திரன் ஐஏஎஸ் தேசிய கல்விக்கொள்கையை திணிக்க முயல்கிறார் - ராஜினாமா செய்த மாநில உயர்கல்வி ஒருங்கிணைப்பாளர்

author img

By

Published : May 11, 2023, 7:11 PM IST

தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்கும் குழு கலைக்கப்படலாம் என முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் குழு கலைக்கப்படலாம்

சென்னை: முன்னாள் மாநில உயர்கல்வி குழுவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நேற்றைய தினம் விலகிய ஜவகர்நேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''தமிழக அரசு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் தேசிய கல்விக் கொள்கையை புறக்கணித்து, தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்தன்மை மிக்க கல்விக் கொள்கையை உருவாக்க உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் என்னுடன் இணைந்து ஒரு குழு 13 மாதங்கள் பணியாற்றியது. தனித்தன்மை கொண்ட கல்விக் கொள்கை என்றால், அந்த மாநிலத்தில் இருக்கும் மக்களின் நிலையை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். ஆனால், உருவாக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. தனித்துவம் வாய்ந்த கல்விக்கொள்கை என வரும்போது மக்களின் பிரச்னையை வெளிப்படுத்தும் படியும்,

மக்களிடம் இருக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டறியும் படியும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை பிரதானப்படுத்தி தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது தான் கருத்து விவாதங்கள் துவங்கி உள்ளன.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெற்றக் கருத்துகளை ஆலோசித்து வரும் நிலையில், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் அழைத்துக் கூட்டங்கள் நடத்தும்போது அதிகாரிகளை வைத்துக் கொண்டு நடத்த வேண்டும் எனவும், தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அதில் இடம் பெற வேண்டும் எனவும் கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன் முதலமைச்சரிடம் இந்தப் பிரச்சனையைப் பற்றி முறையிட முயன்றேன்.

அதிலும் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காததால், மக்களிடம் இந்த பிரச்னையைக் கொண்டு வந்துள்ளேன். இந்தக் கொள்கை தொடர்பாக 13 குழுக்கள் அமைத்ததையும், 113 உலகளாவிய துறை வல்லுநர்களையும் நிபுணர்களையும் குழுக்களாக அமைத்ததையும் 252 பக்கங்கள் கொண்ட புத்தகமாய் வடிவமைத்துள்ளேன். அதிகாரிகளிடமிருந்து தேசிய கல்விக் கொள்கையை சார்ந்து இருக்கும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என மிரட்டல்கள், அழுத்தங்களும் இடம்பெறுகின்றன.

இதனால் தமிழ்நாட்டிற்கு என தனித்தன்மை மிக்க கல்விக் கொள்கை அமைக்கப்படுமா? என சந்தேகம் இருக்கிறது. தன்னிடம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், சொல்வதை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் கமிட்டியை கலைக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும் எனவும் ஒருமையில் பேசினார். அதனையும் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

11 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் விவாதங்கள் தொடங்கியுள்ளன. ஆகையினால், நுழைவுத் தேர்வு தொடர்பான விவாதங்கள் ஏற்படவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் குழுவில் பங்கேற்பதில்லை. 60 சதவீதம் பேர் குழுவில் பங்கேற்கிறார்கள். 40 சதவீதம் பேர் குழுவில் ஆர்வம் காட்டுவதில்லை. தனித்துவம் வாய்ந்த கல்வி கொள்கையில் எந்த திணிப்பும் இருக்கக் கூடாது.

அவர்கள் அவர்களது பணிகளை செய்யவேண்டும், மற்றவர்கள் குழு எடுக்க வேண்டிய பணிகளில் கருத்துகளை திணிக்கக் கூடாது. கல்விக் கொள்கையை அமைக்கும் குழுவிற்கு சுதந்திரம் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாநில கல்விக் கொள்கை மக்களுக்கான கொள்கையாக உருவாகும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் இதுவரை இல்லாத துர்பாக்கியம்" - ஆளுநரை விளாசிய வைகோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.